இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கமானது
இலங்கை பாராளுமன்றத்தில் 1987, 46 ஆம் இலக்க சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கமானது, சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தில் (International Federation of Journalists) நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டுள்ளது.
இது ஊடகவியலாளர்களுக்கான தொழிற்சங்கமாக, தொழிற்சங்க பதிவு இலக்கம் 8528 இன் கீழ் தொழில் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள், இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
ஊடகவியலாளர்களின் தொழில்சார் உரிமைகளைப் பாதுகாப்பது சங்கத்தின் முதன்மை நோக்கமாகும். அதேபோல நெறிமுறைசார் ஊடக அறிக்கையிடலையும் ஊக்குவிக்கின்றது. ஜனநாயக அரசை கட்டியெழுப்புவதற்கு ஊடக சுதந்திரம் அத்தியாவசிய அங்கமாகும் என்பதை உறுதியாக நம்பும் சங்கம், ஊடகவியலாளர்கள் தமது தொழில் நடவடிக்கையை சுதந்திரமாக முன்னெடுப்பதற்குள்ள உரிமைக்காக எவ்வித நிபந்தனைகளுமின்றி முன்நின்று செயற்படும்.
ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டுக் கோட்பாடுகளால் நிர்வகிக்கப்பட வேண்டும் என எதிர்ப்பார்க்கும் சங்கம், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும். இதற்காகவே இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் அங்கத்தவராக சங்கம் செயற்படுகின்றது.

OUR PARTNERS


நோக்கு
‘தொழில் நெறிமுறைசார் ஊடகவியலாளர்களை உருவாக்குதல்.’
இலக்கு
‘நெறிமுறை ஊடக சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு பொறுப்பான பொது சேவை ஊடகத்தை உருவாக்க பணிபுரிதல்’