வரலாறு
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கமானது
2014
IFJ MEMBERSHIP
சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தில் அங்கத்துவம் பெற்ற இலங்கையின் முதலாவது ஊடக சங்கம் என்பதுடன், இன்றளவிலும் உறுப்புரிமை பெற்றுள்ளது.
2014
TRADE UNION
2005,2007, 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டங்களின்போது முன்மொழியப்பட்ட யோசனைகளின் பிரகாரம் 2014 ஆம் ஆண்டில் தொழிற்சங்க கட்டளை சட்டத்தின்கீழ், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
2009
OFFICE BUILDING
சங்கத்துக்கான இடம் புனரமைக்கபட்டு, அங்கு புதிய அலுவலகம் நிர்மாணிக்கும் பணி 2009 இல் நிறைவுபெற்றது. தற்போதும் அதே அலுவலகமே செயற்படுகின்றது.
2007
COLOMBO DECLARATION
ஊடக சுதந்திரம் மற்றும் சமூக பொறுப்புக்காக 1998 ஆம் அண்டில் தயாரிக்கப்பட்ட கொழும்பு பிரகடனத்தில், 2007 ஆம் ஆண்டில் சங்கம் கையொப்பமிட்டது. அதன்பின்னர் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் அங்கத்துவம் பெற்றது. இதன்பிரகாரம் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் இலங்கை ஊடகக் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் பணிப்பாளர் குழுவில் பிரதிநிதித்துவம் கிடைத்தது.
2005
THOLANGAMUWA DECLARATION
2005 ஆம் ஆண்டில் தோலங்கமுவ பிரகடனத்தை வெளியிடுவதற்கு சங்கம் பங்களிப்பு வழங்கியது.
1987
PARLIAMNET ACT No. 46 of 1987
1987 ஆம் ஆண்டில் 1987, 46 ஆம் இலக்க சட்டமூலத்தின் பிரகாரம் சங்கமானது, பாராளுமன்றத்தில் கூட்டிணைக்கப்பட்டது. இது தொடர்பான திருத்தச்சட்டமூலத்துக்கு 2009 ஆம் ஆண்டில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டு, அதன்பின்னர் வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.
1985
OFFICE
1985 ஆம் ஆண்டில் சங்கத்துக்காக, கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான 20 பேர்ச்சஸ் காணி, 99 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. காலபோக்கில் அப்பகுதியில் சிறு அலுவலகமொன்று நிர்மாணிக்கப்பட்டது.
1979
ஊடகவியலாளர்களுக்கான தொழிற்சங்கமொன்றை உருவாக்குவதை இலக்காகக்கொண்டே இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், தொழிற்சங்க கட்டமைப்பின்கீழ் பதிவுசெய்யப்பட்டிருக்கவில்லை.
1979
FORMATION
இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கமானது, 1979 ஆம் ஆண்டில் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி உதயமானது. அன்றைய தினத்தில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் இலங்கை மன்றத்தில்கூடி, சங்கத்தின் நிர்வாகச் சபையை தெரிவு செய்தனர். இதன்படி சங்கத்தின் தலைவராக ரி.எப். காரியகரவன அவர்களும், செயலாளராக நிவ்டன் செனவிரத்ன அவர்களும், பொருளாளராக ஆர். சிவகுருநாதன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.