அங்கத்துவம்
அச்சு, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களில் நிரந்தர, ஒப்பந்தம், சுதந்திர மற்றும் இதர பிரிவுகளின்கீழ் பணியாற்றும் தொழில்சார் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உறுப்புரிமையை பெறுவதற்கு தகுதியடையவர்கள்.
அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல்.
அ) அங்கத்துவ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கமைய ஏதேனும் ஒரு விண்ணப்பதாரியின் அங்கத்துவத்தை
ஏற்றல், நிராகரித்தல் , இடைநிறுத்தல் மற்றும் அங்கத்துவத்திலிருந்து நீக்குதல் தொடர்பான சகல அதிகாரமும் நிறைவேற்று குழுவுக்கு உண்டு.
ஆ) உறுப்புரிமை கிடைக்கப்பெற்று ஆறு மாதங்களின் பிறகு, சங்க கூட்டங்களின்போது வாக்களிப்பதற்கான அதிகாரம் உண்டு. அங்கத்தவர் ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே உரித்தாகும்.
இ) அங்கத்தவர் தொடர்பான ஒழுக்காற்று நடவடிக்கையின்போது, பொதுச்சபைக்கோ அல்லது இதர தரப்புகளுக்கோ அது
தொடர்பில் விளக்கமளிப்பதற்கு நிறைவேற்றுக்குழு கட்டுப்படவில்லை என்றபோதிலும், சம்பந்தப்பட்ட தீர்மானம்
பொதுச்சபையில் முன்வைக்கப்பட வேண்டும்.
உறுப்பினர் கட்டணம்
மாத அங்கத்துவக் கட்டணம் 20 ரூபா. அங்கத்துவ பதிவுக்கட்டணம் 200 ரூபா.