எமது செயற்பாடு
மூலோபாயத் திட்டங்கள் 2021
கருப்பு ஜனவரி ( அரசியல் காரணங்களால் கொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூரல். அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நீதியை பெறுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தை வலியுறுத்துதல்)
புதிய அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளல் மற்றும் அங்கத்துவத்தை புதுப்பித்தல்.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக ‘ உரிமைகள் மற்றும் பொறுப்பு’ சாசனத்தை ஊடகவியலாளர்கள் மத்தியில் கொண்டுசெல்லல்.
ஊடக நிறுவனங்களுக்கு நேரில்சென்று, ‘உரிமைகள் மற்றும் பொறுப்பு’ சாசனம் தொடர்பான கையேட்டை ஊடகவியலாளர்களுக்கு பகிர்ந்தளித்தல்.
தொழிலை இழந்த ஊடகவியலாளர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவி வழங்குதல் ( தேவையேற்படின் சட்டத்தரணிக்கான கொடுப்பனவை செலுத்தல்)
இலங்கையில் ஊடகத்துறைக்கு தேவையான சுய கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆராய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட
துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி யோசனைகளை முன்வைத்தல்.
ஊடகவியலாளர்களை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் இணைப்பதற்கான பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
நெறிமுறை அறிக்கையிடல் தொடர்பில் பயிற்சியளித்தல்.
திட்டங்கள்
ஊடகவியலாளர்களுக்கான ‘உரிமைகள் மற்றும் பொறுப்பு’ தொடர்பில் இருநாட்கள் செயலமர்வு 2019 செப்டம்பர் 06 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை பாதுக்க, போபேயிலுள்ள ‘தேவ்னி’ ஹேட்டலில் நடைபெற்றது. குறித்த செயலமர்வில் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம், ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் அங்கத்தவர்கள் பங்கேற்றிருந்தனர்.
மேற்படி செயலமர்வின் பிரதிபலனாக ஊடகவியலாளர்களுக்கான ‘உரிமைகள் மற்றும் பொறுப்பு’ தொடர்பான சாசனம்
2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. இவ்வேலைத்திட்டத்துக்கான நிதி பங்களிப்பை IREX வழங்கியது.
அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களைச் சேர்ந்த 50 பேருக்காக Zoom தொழில்நுட்பம் ஊடான செயலமர்வு 2021 ஒக்டோபர்/நவம்பர்
மாதங்களுக்கிடையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு IFJ Asia-Pacific ஒத்துழைப்பு கிடைக்கும்.
Media Solidarity
- Established safety fund to help in obtaining legal advice for working journalists who have been arrested or imprisoned for being detained by the Police for engage in journalism, providing legal fees to represent them, protecting the rights of working journalists etc., in collaboration with the USAID and IREX.
- Screening the movie NIGHTCRAWLER and having an open conversation with journalists on the movie. The theme of the conversation was the ‘Freelance provincial journalists and the TV editors towards them’. Movie NIGHTCRAWLER was based on the unethical reporting of a Television freelancer from Los Angeles.
- Screening the movie SPOTLIGHT and having an open conversation on the movie. It was opened to journalists and those interested in the subject of journalism. The SPOTLIGHT film is based on a world-renowned report by a team of investigative journalists from the Boston Globe newspaper.
- Name the month of January of every year as BLACK JANUARY and carrying on activities together with Media Organizations Collective, demanding justice for journalists who have been murdered, disappeared and tortured as well as protests against the terror on media.